தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள்,
கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் மூடப்பட்ட நிலையில்
உள்ளதா என உறுதி செய்யவேண்டும்.
மழையில் இருந்து காத்துக்கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்ககூடாது எனவும், அதனால் இடி, மின்னல் மூலம் ஆபத்து ஏற்படும் என அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்.மழைக்காலங்களில் பள்ளிக்கு வரும்போதும், திரும்பிசெல்லும்போதும் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் பாதையை தவிர்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிக்கக்கூடாது எனஅறிவுரை வழங்க வேண்டும்.பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருந்தால் அவைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் சுவர்கள், அறிவியல் ஆய்வு கூடங்கள், கணினி அறைகளில் அறுந்து அல்லது துண்டித்த நிலையில் மின்வயர்கள் உள்ளதா என தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும். சுவிட்ச்கள் சரியாக உள்ளதா, மழைநீர் படாத வண்ணம் உள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக்கூடாது.பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்கள், வகுப்பறை, கழிவறை மற்றும் சுற்றுச்சுவர் இருப்பின் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கட்டிட பராமரிப்பு பணி மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்லதடை விதிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளி தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...