Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு மதிய உணவு திட்டமே காரணம்

தமிழகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு மதிய உணவு திட்டமே காரணம்: 'நம் கல்வி நம் உரிமை' நூல் வெளியீட்டு விழாவில் என்.ராம் தகவல்

'தி இந்து' தமிழ் நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 'நம் கல்வி நம் உரிமை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்றோர் (இடமிருந்து): பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ்.மோகனா, 'தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் | படம்: க.ஸ்ரீபரத்.
தி இந்து' தமிழ் நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 'நம் கல்வி நம் உரிமை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்றோர் (இடமிருந்து): பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ்.மோகனா, 'தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் | படம்: .ஸ்ரீபரத்.தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு மதிய உணவுத் திட்டமே காரணம் எனதி இந்து' குழுமத்தின் தலைவர் என்.ராம் தெரிவித்தார்.

தி இந்து' தமிழ் நாளிதழில் கல்வி தொடர்பாக 4 வாரங்கள் வெளியான கட்டுரைகள் 'நம் கல்வி நம் உரிமை' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. ‘தி இந்து'வும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து வெளி யிட்டுள்ள இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் நூலை வெளியிட, முதல் பிரதியை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் கு.செந் தமிழ்ச் செல்வன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் என்.ராம் பேசியதாவது:

ஒரு நாளிதழ் நம்பகத்தன்மை வாய்ந்த செய்திகளை விமர்சனப் பார்வையுடன் வெளியிட வேண் டும். கல்வி, அறிவியல், பொருளா தாரம், கலாச்சாரம், மொழி, இலக் கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மக்கள் விரும்பும் செய்திகளை விட, மக்களுக்கு தேவையான செய்திகளை வெளியிட வேண்டும் என்பதை 'தி இந்து' தமிழ் ஆசிரியர் குழு செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட் டது. மதிய உணவு கொடுத்தால் படிப்பார்களா? என்றெல்லாம் பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அனைவருக்கும் கல்வி கற்பதற்கான சம வாய்ப்பை மதிய உணவுத் திட்டமே வழங்கியது. மற்ற மாநிலங்களை விட கல்வியில் தமிழகம் அடைந்திருக்கும் முன் னேற்றத்துக்கு இதுவே காரணம். அதனால்தான் இந்த திட்டம் நாடு முழுவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. பொதுப்பள்ளி முறை இருந்தால் மட்டுமே அனை வருக்கும் கல்வி என்பது சாத்தியமாகும்.

இவ்வாறு என்.ராம் கூறினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.மோகனா:

அரசுப் பள்ளியும், தாய்மொழி கல்வியும் இல்லாவிட்டால் இன்று இந்தியாவில் ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கல் வியே கிடைத்திருக்காது. தாய் மொழி கல்வியே குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. மாணவர்கள் ஆசிரியர்களிடம் பரஸ்பரம் உறவை வளர்க்கும் அரசுப் பள்ளிகள்தான் இந்தியாவின் உயிர்நாடி.

தி இந்து' தமிழ் நடுப்பக்க ஆசிரியர் சமஸ்:

தனியார் பள்ளிகளுக்கும், ஆங்கில வழி கல்விக்கும்தி இந்துஎதிரானதல்ல.

ஆனால், ஆங்கிலம் என்ற மொழியை சந்தைப் பொருளாக்கி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதைத்தான் எதிர்க் கிறோம். அரசுப் பள்ளிகள் ஏற்படுத்தி யுள்ள தாக்கம் பற்றிதி இந்துதமிழ் நாளிதழில் வெளியான தொடர் கட்டுரைகள் அரசுப் பள்ளிகள் பற்றி உள்ள பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

எழுத்தாளர் எஸ்.வி.வேணு கோபாலன்:

அரசுப் பள்ளிகள் நிகழ்த்திய சாதனைகளைப் போற்றும் இந்நூல் ஒவ்வொரு ஆசிரியரையும், மாணவரையும் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்நூலை ஒரு அக்னிகுஞ்சாகவே பார்க்கிறேன். மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர்கள் உருவாக இந்நூல் ஒரு கருவி என்பதில் சந்தேகமில்லை.

பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை' அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு:

இந்தியாவில் கடந்த 35 ஆண்டுகளில் உண்மையான கல்வி கற்றவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் கொல்லப்படுகிறார். ஆனால், பொறியியல் கல்லூரி மாணவர்கள் எதுவும் நடக்காதது போல அமைதியாக இருக்கிறார்கள். சமூகத்தில் நடக்கும் அநீதி களை எதிர்த்து போராடும் துணிவில்லாதவர்களை எப்படி கற்றவர்களாக ஏற்க முடியும்? தாய்மொழி வழி கல்விக்கும், பொதுப்பள்ளி முறைக்கும் வலு சேர்க்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.


நிகழ்ச்சியை 'தி இந்து' குழுமத்தின் மூத்த பொதுமேலாளர் (நிர்வாகம்) வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். தமிழ் நாடு அறிவியல் இயக்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், சென்னை மாவட்டத் தலைவர் கு.சக்திவேல் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive