சிவகாசி: தீபாவளிக்காக புதுவகை பேன்சி ரக பட்டாசுகளாக ஜெரிக்கோ, ஷாக்,
டிவிஸ்ட் டென், எக்கோ மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளன.இதற்கு நல்ல
வரவேற்பும் கிடைத்துள்ளது.
தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு, புத்தாடைகள் தான் நினைவிற்கு வரும்.
இனிப்பானது சாப்பிடுபவருக்கு மட்டும்தான் ருசி தெரியும். புத்தாடையானது அதை
அணிவோர்தான் மிடுக்காக தெரிவார். ஆனால் பட்டாசுதான் வெடிப்போரையும், அதை
கண்டு ரசிப்போரையும் பரவசப்படுத்தும்.
பட்டாசுக்காக சிவகாசியில் 600 க்கு மேற்பட்ட ஆலைகள் செயல்படுகின்றன.
ஒவ்வொரு ஆலைகளும் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஆண்டுக்கு ஆண்டு
புதுமைகளை புகுத்தி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கின்றன.
வேதிப்பொருட்களின் கலவையை வித்தியாசமாக செயல்பட வைத்து அவை வானில்
சென்று வெடித்து ஒளி சிந்தும்போது, பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்து
மகிழ்ச்சியை கொடுப்பது பேன்சி ரக
பட்டாசுகளே.இந்த ஆண்டு ஸ்டாண்டர்டு நிறுவனத்தால் ஜெரிக்கோ, ஷாக்,
டிவிஸ்ட் டென், எக்கோ உட்பட எண்ணற்ற புது வகை பேன்சி ரக பட்டாசுகளை
அறிமுகம் செய்து மார்கெட்டில் விற்பனைக்காக விட்டுள்ளன.
ஜெரிக்கோ : இப் பட்டாசில் தீ பற்ற வைத்தால் வானில் சென்று வெடித்து
முத்துக்களை உதிர்க்கும் போது வானமே பர்புள் கலரில் ஜொலிக்கும். இந்த ஒளி
வெள்ளத்தின் போதே திடீரென 'விசில்' உருவாகி வானில் சத்தம் எழுப்பும்.
இதுபோல் 'எக்கோ' ராக்கெட்டும் விசில் எழுப்ப கூடியது. 'கீரின் பியி'
ராக்கெட் மேலே வெடிக்கும் போது வண்ணத்துபூச்சி சிறகை விரிப்பது போல் பச்சை
நிற வண்ணத்தை தரக்கூடியது. 'போட்டான்' ராக்கெட் பல வண்ண கலர்களை
வெளிப்படுத்த கூடியது. இதை பார்ப்பவர் மனதில் உற்சாகம் துள்ளும். 5 பீஸ்
கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை ரூ.450.சிங்கிங் பேட்(பாடும் பறவை): இது 56
ஷாட் வகை பட்டாசுகளின் ஒன்று. அரை வட்ட வடிவில் ஏழு பட்டாசுகளை ஒரே
திரியில் இணைக்கப்பட்டிருக்கும். பட்டாசின் ஒரு மூலையில் தீ பற்ற வைத்தால்
அடுத்தடுத்து ஏழு பட்டாசிலும் தீப்பற்றி, மேலே சென்று பல வண்ணங்களில் ஒளி
சிந்தும். அடுத்த கொஞ்சம் நேரத்தில் பறவைகள் கூச்சிடும் சத்தம் கேட்டு,
வெளிச்சம் பரவி பிரகாசமான பல ஒளிக்கதிர்கள் சிதறுவது உள்ளத்தை கொள்ளை கொள்ள
வைக்கும். ஒரே பீஸ் கொண்ட இதன் விலை ரூ. 5320.
இதுபோல் ஷாக், புளு ஸ்கை, எலக்ட்ரிக் பாம், பாம் அர்டோ, டிவிஸ்ட் டரன்
போன்றவையும் அறிமுகமாகி உள்ளன. 500 ஷாட் வகையில் 'பனோரம்மா' என்ற
புதுவகையும் அறிமுகமாகி உள்ளது. இது 180 அடிக்கு மேல் சென்று வெடித்து,
10 நிமிடத்திற்கும் மேல் விசில், கிராக்கிங் போன்ற 5 விதமான சத்தம்,
வண்ண ஒளி தரக்கூடியது. இதன் விலை ரூ. 11,650.டவர் ஸ்பாட்: இது
பூந்தொட்டியில் பெரிய வகை. 2 அடி உயரம் கொண்ட இதில் தீ பற்ற வைத்தபின்
ஒன்றரை நிமிடம் வரை பூக்களை ஒளியாக சிந்தும். பல வண்ண நிறங்களை
வெளிப்படுத்தும் 10 பீஸ் கொண்ட இதன் விலை ரூ.340.
ரெயின்போ பாக்: குட்டீஸ்கள் மகிழ்விக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
பற்ற வைத்தால் தவளை வடிவில் நான்கு முறை தாவி சென்று மறைய கூடியது.
விசில் ஸ்பார்க்லர்ஸ்: இது கையில் பிடித்து ஒளி சிந்தும் மத்தாப்பு வகை.
பற்ற வைத்தவுடன் விசில் சத்ததுடன் மல்டி கலரில் ஒளி சிந்தும்.இதை
பார்க்கும் குட்டீஸ்கள் நிலை கொள்ளாமல் குதித்து,
மகிழ்வர் . இதுபோல் டிஸ்கோ பிளாஸ், சீயர்ஸ், ஜெட் பவுன்டேன் என பல வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.இது தவிர வழக்கமான
சரவெடியில் 10 ஆயிரம் வாலா வெடியானது அந்த பகுதியே மிரள வைக்கும் அளவிற்கு தொடர்ந்து வெடிக்கும். இதன் விலை ரூ. 6360.
பேன்சிரக பட்டாசில் ஜாய் 240 ஷாட், சிறுவர்களுக்கென 'கிளமர் கிப்ட்
பாக்ஸ்' கலர் பவுண்டன் உட்பட 21 வகை சவுன்ட்லெஸ் கிராக்கிரஸ் ரூ.650
விற்பனைக்கு வந்துள்ளது. இது போல் இன்னும் பல ரகங்கள் விற்பனைக்கு
வந்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...