தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஜந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும் 85 அரசு கலைக் கல்லூரிகள்
உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 13,000 நிரந்தர உதவிப் பேராசிரியர்,
பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு துறைகளில் உதவிப்
பேராசிரியர் பற்றாக்குறையால், கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் தேர்வு
செய்யப்பட்டது போல, கல்வித் தகுதி, பணி அனுபவச் சான்று, கூடுதல் கல்வித்
தகுதி மூலம் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலான அரசுக் கல்லூரிகள் இரண்டு
சிப்ட் முறையில் இயங்குகிறது. இதில், முதல் ஷிப்ட் மாணவர்களுக்கு பாடம்
நடத்த சுமார் 1,623 கௌரவ விரிவுரையாளர்கள், இரண்டாவது ஷிப்டில் சுமார்
1,627 கௌரவ விரிவுரையாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ. 10,000
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு 10 மாதங்கள் மட்டுமே பணி,
மாதம் தலா ஒரு நாள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டது. தொகுப்பூதியத்தில் கௌரவ
விரிவுரையாளர்களாக தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பணி புரிந்தால், நிரந்தர உதவிப்
பேராசிரியர் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும்போது, கூடுதலாக ஏழு
மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற அடிப்படையில் பலர் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக முதல்
ஷிப்டில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.
சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கௌரவ
விரிவுரையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களின் நலன் கருதி
உடனடியாக தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற மாநில தொடர் நடவடிக்கைக் குழுத் தலைவர் குமார் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 31 அரசுக் கலை
கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், (பொறுப்பு)
முதல்வர்களே பணியாற்றுவதால் அன்றாட அலுவல், வளர்ச்சிப் பணிகள்
பாதிக்கப்படுகின்றன. அதேபோல, கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஜந்து
மாதங்களாக சம்பளம் வழங்காததால், அவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றார்.
Pl try to give their salary... Consider his salary problem..
ReplyDelete