நன்றாக கைகழுவுவது, சுகாதாரம் பேணுவது குறித்து குறும்படம், வானொலி
நிகழ்ச்சி தயாரிக்கும் போட்டியை அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் யுனிசெப்
அறிவித்துள்ளன.இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல்
துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
நன்றாக கை கழுவுவதன் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகளை 51 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று யுனிசெப் ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், இதற்கு பலரும் உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தமிழகத்தில் 30 சமூக வானொலிகள் உள்ளன.
ஆனால், கை கழுவுதல் மற்றும் சுகாதாரம் குறித்து குறைவான நிகழ்ச்சிகளே ஒலிபரப்பாகின்றன. படங்களிலும் இதுகுறித்த செய்திகள் கூறப்படுவதில்லை.இதைக் கருத்தில் கொண்டு, கை கழுவுதல், சுகாதாரம் பேணுதல் குறித்து குறும்படம் மற்றும் சமூக வானொலிக்கான நிகழ்ச்சிகள் தயாரிக்கும் போட்டி அண்ணா பல்கலைக்கழகம், யுனிசெப் சார்பில் நடத்தப்படுகிறது. குறும்படம் இரண்டரை நிமிடங் களுக்குள் இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஊடகம் சார்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். சமூக வானொலிக்கான நிகழ்ச்சிகள் 15 நிமிடங்கள் இருக்கலாம். தமிழகத்தில் செயல்படும் சமூக வானொலிகள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
படைப்புகள் அக்டோபர் 29-ம் தேதிக்குள் வந்துசேர வேண்டும். அனுப்பவேண்டிய முகவரி: டாக்டர் எஸ்.அருள்செல்வன், உதவி பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், ஊடக அறிவியல் துறை, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை 25.
மேலும் விவரங்களுக்கு 044-2235 8246 என்ற தொலைபேசி எண் அல்லது dmsauchennai@gmail.comஎன்ற இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் படைப்புகளுக்குநவம்பர் முதல் வாரத்தில் விருதுகள் வழங்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...