மத்திய அரசு ஊழியர்களைப் போன்றே, மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்வு அளிக்கப்படும்.
அதன்படி, மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கான கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
I AM WAITING
ReplyDeleteYour wait is over
ReplyDelete