தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரை, பள்ளி வேலை செய்ய
ஈடுபடுத்தக்கூடாது எனவும், மீறும் தலைமை ஆசிரியர் மீது, ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்
உள்ளன. இப்பள்ளிகளில், ஆசிரியர் பணியிடம் தவித்து, சத்துணவு அமைப்பாளர்
மற்றும் சமையலர் பணியிடங்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றன.
இதனால், குடிநீர் எடுத்து வருவது, வகுப்பறை சுத்தம் செய்வது, கழிப்பறை
சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு, பல பள்ளிகளில் மாணவர்களை பயன்படுத்தி
வருகின்றனர். இதுகுறித்த புகார் எழுந்த நிலையில், பள்ளி வேலைகளில், மாணவ,
மாணவியரை ஈடுபடுத்தும் தலைமை ஆசிரியர் மீது, ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கப்படும் என, தொடக்கக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள
சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவியரை, பள்ளி வேலைகளில்
ஈடுபட செய்யக்கூடாது. அதற்கென பணியாற்றும் வேலையாற்றும் பணியாட்களை செய்து
முடிக்க, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறி, மாணவர்களிடம்
ஒப்படைக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது, உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும்
தொடக்கக்கல்வி அலுவலகம் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.
அதெல்லாம் சரி பள்ளிகளில் அலுவலக பணிகளை கணினி ஆசிரியர்களுக்கு கொடுக்கும் தலைமையாசிரியர்களுக்கு ? ? ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete