புதுடில்லி:''வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்அதிகாரிகள்
பதவிகளை ராஜினாமா செய்து வெளியேற வேண்டும்,'' என, மத்திய, சாலை
போக்குவரத்துத்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த நிதின் கட்காரி
கண்டிப்புடன் கூறினார்.டில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர்
பேசியதாவது:நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஏராளமான
வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வருகின்றன.
பிரதமர் மோடி உத்தர வின் படி, உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி
விடப்படப்பட்டுள்ளன. எவ்வளவு வேகமாக செயல்பட முடியுமோ அவ்வளவு வேகமாக
செயல்பட்டால் தான் இலக்கை அடைய முடியும்.ஆனால், அதை மறந்து, இன்னமும் பழைய
பல்லவியை பாடிய படி, எதற்கெடுத்தாலும் நிர்வாக நெறிமுறைகளை காரணம் காட்டி,
முன்னேற்றத்திற்கு இடையூறாக சில அதிகாரி கள் உள்ளனர்.அவர்களை நான்
எச்சரிக்கிறேன். மாறுங்கள்; இல்லையேல், வி.ஆர்.எஸ்., எனப்படும், தாங்களாக
முன்வந்து பணியிலிருந்து ஓய்வுபெறும் திட்டத்தின் படி பதவியிலிருந்து
வெளியேறுங்கள்; நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்காதீர்கள்.
இவ்வாறு, நிதின் கட்காரி கூறினார்.
Seayalpadatha MLAs mp cm pm eavargalai veetuku poga sollungal
ReplyDelete