தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது.தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொருஅலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்களுக்கு, சுய விவர படிவங்கள் வழங்கி, விவரம் சேகரிக்கப்படுகிறது.
தேர்தல் பணியில், யார் யார் ஈடுபட வேண்டும், யார் யாருக்கு விதிவிலக்கு என, தேர்தல்கமிஷன்அறிவித்துள்ளது.
* அதன்படி, கர்ப்பிணி அலுவலர்கள், முதல் மூன்று மாதமாகவோ அல்லது எட்டாவது மாதமாக இருந்தாலோ, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்* குடிநீர், மின்சாரம், மருத்துவம், தீயணைப்பு துறைகளில் உள்ள அலுவலர்களுக்கும், தேர்தல் பணியில் விலக்கு உண்டு
* ஆனால், தேர்தல் காலத்தில், 4, 5, 6, 7 மாத கர்ப்பிணியாக இருந்தால், பணியில் ஈடுபட வேண்டும். பதற்றமான ஓட்டுச் சாவடிகளில், 'மைக்ரோ அப்சர்வர்'களாக, வங்கி உயர் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். கடந்த தேர்தலில், சில இடங்களில், கடைநிலை ஊழியர்களை, வங்கிகள் அனுப்பின. இதனால், சிக்கலான நேரங்களில் சரியான முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது
* இந்நிலை, வரும் தேர்தலில் ஏற்படக் கூடாது என்பதற்காக, வங்கி உயர் அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இத்தகவலை, தேர்தல்கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...