தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் கட்டட வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் எமராஜன் தலைமை வகித்தார்.
விருதுநகர் மாவட்ட செயலாளர் மகாலிங்கம் வரவேற்றார். தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ச.கண்ணன், மாவட்ட தலைவர் முத்துராஜ்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
பொதுச்செயலாளர் க.லட்சுமணன், எதிர்கால நடவடிக்கை குறித்து விளக்கமாக
எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் 17 மாவட்டங்களில் இருந்து செயற்குழு
உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர்களை கல்வித்துறையுடன் இணைக்க வேண்டும்,
பணி பாதுகாப்பு வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொருளாளர் லோகராஜன் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க ஊழியர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...