ரெட்டியார்சத்திரம்: மணமாகாத, கணவருடன் வசிப்போருக்கு விதவை உதவித்தொகை,
இறந்தவர்கள் பெயரில் வினியோகிக்கப்பட்ட உதவித்தொகை குறித்த புகார்கள் மீது
மறு ஆய்வு செய்ய வேண்டுமென, முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சக்திவேல்
அனுப்பியுள்ள மனு:
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு மூலம் பல்வேறு திட்டங்களில்,
உதவித்தொகை வழங்கப்படுகிறது. சமூக பாதுகாப்புத் திட்டத்தில், முதியோர்,
விதவை, முதிர்கன்னி உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
வருவாய்துறை அதிகாரிகளின் பரிந்துரைப்படி, இதற்கான பயனாளிகள் தேர்வு
செய்யப்படுகின்றனர். தகுதியுள்ள பலர் அலைக்கழிப்பு, செல்வாக்கு இல்லாத
காரணத்தால் இதற்கான தகுதியைப்பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்திய ஆய்வில் போலி
பயனாளிகள் பலர் கண்டறியப்பட்டனர். மணமாகாத, கணவருடன் வசிக்கும் பெண்கள்
உள்பட பலர் விதிமீறி பலன் அடைந்ததாக, சில வி.ஏ.ஓ.,க்கள் போலிகளை நீக்கம்
செய்தனர்.
குட்டத்துப்பட்டி, டி.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், இறந்தவர்களின்
பெயரில் ஆதரவற்றோருக்கான உதவித்தொகை வினியோகிக்கப்பட்டு உள்ளது.
இப்பிரச்னையை வங்கி, வருவாய் துறை அதிகாரிகள் மூலம் மறைப்பதற்கான
முயற்சிகள் நடக்கிறது. முறைகேடுகளை மீண்டும் மறு ஆய்வு செய்து நடவடிக்கை
எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...