Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி என்ன?

        பாலிடெக்னிக்  கல்லூரி பேராசிரியர்கள் பணியிடத்திற்கு விரைவில் அறிவிப்பு வர உள்ளது.இதில் கல்வித்தகுதி நிர்ணயிப்பதில் பழைய முறை பின்பற்றபடுமா இல்லை புதியமுறை அதாவது புதிய கல்வித்தகுதி பின்பற்றப்படுமா என குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள் உள்ளனர். 

             அதாவது தற்போது உள்ள நடைமுறைப் படி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான (இயற்பியல்,வேதியியல், கணிதம் போன்ற) பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களது முதுகலைப் படிப்பில் (M.A /M.Sc) 60% மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சிப்பெற்றிருந்த்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.இதனால் 60% க்கு குறைவான மதிப்பெண்கள் வைத்துள்ள  இலட்சக் கணக்கான முதுகலைபட்டதாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் இதில் நெட்/செட் தேர்ச்சிப்பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.நெட்/செட் தேர்ச்சிப்பெற்றவர்களும் 60% மதிப்பெண்களை பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள்  என TRB கூறி வருகிறது.மேலும் போட்டித்தேர்வு  வைத்து தான் தேர்வுச்செய்யப் படுகிறார்கள்  (அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் பணியிடத்திற்கு மட்டும்  போட்டித்தேர்வு வைத்து தேர்வு செய்வதில்லை இது TRB யின் மீது பொதுமக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்திள்ளது ). இதில் 60%க்கு குறைவான மதிப்பெண்கள்(10 வருடங்களுக்கு முன் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு ) உடையவர்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்தால் திறமையான பேராசிரியர்களை அதிக அளவில் அடையாள காண முடியும். எனவே தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு கல்வித்தகுதி நிர்ணயிப்பதில் புதிய முறை அமல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.




2 Comments:

  1. When will TRB publish TRB govt polytechnic college lecturer exam 2015? Kindly anybody reply me...

    ReplyDelete
  2. Is NET/SLET compulsory for polytechnic college lecturer post ?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive