தமிழக அரசு மருத்துவமனை களில் பணிபுரிய தற்காலிக அடிப்படையில் 547 அரசு
உதவி டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி
நேர்முகத் தேர்வு மூலமாக அரசு உதவி டாக்டர்களை தேர்வு செய்வதற்கு அரசு
மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்புமருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு
தெரிவித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவமனை களில் பல்வேறு துறைகளில் பணிபுரிய தற்காலிக அடிப்படை யில் 547 அரசு உதவி டாக்டர்கள் நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) நேற்று அறிவித்துள்ளது. எம்ஆர்பி மூலம் எழுத்து தேர்வு நடத்தா மல் நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக அரசு உதவி டாக்டர்களை தேர்ந்தெடுத்தால் முறைகேடுகள் நடப்பதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் (எஸ்டிபிஜிஏ) தெரிவித் துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...