புதுடில்லி,: ''மத்திய அரசின், இரண்டு தங்க முதலீட்டு திட்டங்கள் அடுத்த
மாதம் அறிமுகம் செய்யப்படும்,'' என, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர்
சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், இரண்டு
தங்க முதலீட்டு திட்டங்களுக்கு, மத்திய அரசு, அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, தங்க சேமிப்பு திட்டம், தங்க பத்திர திட்டம் ஆகியவை, அடுத்த மாதம்
அறிமுகமாக உள்ளன. தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ், தங்க நகைகளை,
வங்கியில், 1 - 15 ஆண்டுகள் வரை, டிபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம், 30
கிராம் தங்க நகைகளை டிபாசிட் செய்யலாம். இதற்கு வட்டி வழங்கப்படும்.
முதிர்வு காலத்தில், தங்கத்தின் மதிப்பை பொறுத்து, பணமாகவோ, தங்கமாகவோ
பெற்றுக் கொள்ளலாம். தங்க கடன் பத்திரங்கள், 5, 10, 50 மற்றும் 100 கிராம்
வீதம், 5 - 7 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டதாக இருக்கும். இவற்றில்
முதலீடு செய்யும்போது, சந்தையில் நிலவும் தங்கத்தின் மதிப்பை பொறுத்து,
வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும். ஒருவர், ஓராண்டில், அதிகபட்சமாக, 500
கிராம் வரை, தங்க கடன் பத்திரத்தில் முதலீடு செய்யலாம். இவற்றில் முதலீடு
செய்ய, இந்திய குடிமகன்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவர்.
மத்திய அரசு, தங்க கடன் பத்திரங்கள் மூலம், நடப்பு நிதியாண்டில், 15 ஆயிரம்
கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இவை தவிர, தங்க நாணயங்கள்
இறக்குமதியை குறைக்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அசோக
சக்கரம் சின்னம் பொறித்த தங்க நாணயங்கள், விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு
அவர் கூறினார்.
இறக்குமதி:
* இந்தியா, ஆண்டுக்கு, 1,000 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இதில், 30 சதவீதம், குடும்பங்களின் சேமிப்பிற்கு செல்கிறது.
* தங்கம் இறக்குமதி, ஜூலையில், 89 டன்னாக இருந்தது. இது, ஆகஸ்டில், 120 டன்னாக உயர்ந்துள்ளது.
யாருக்கும் பாதிப்பிருக்காது:
அரசின் சிறு சேமிப்பு திட்டங்களில், வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யும்
போது, சிறு சேமிப்பாளர்கள், மூத்த குடிமக்கள், பெண் குழந்தைகள் ஆகியோர்
பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும்.சக்திகந்த தாஸ், பொருளாதார
விவகாரங்கள் துறை செயலர்வங்கிகளுக்கு நெருக்கடிவங்கிகள், கடனுக்கான வட்டியை
குறைக்கும் போது, டிபாசிட்டிற்கான வட்டியை குறைத்தால் தான், நிதியாதாரத்தை
ஸ்திரமாக வைக்க முடியும். ஆனால் அப்படி குறைக்க முடியாத வகையில்,
வங்கிகளுக்கு போட்டியாக, அரசின் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம்
உள்ளன. அஞ்சலக சேமிப்பு, பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள்
சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி, 8.7 - 9.3
சதவீதமாக உள்ளது. அதனால், இந்த திட்டங்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும்
என, வங்கிகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...