காரைக்குடி:“எட்டாம் வகுப்பு
வரை அனைவரும்
தேர்ச்சி என்ற
கொள்கையால், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்
குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும்.”, என
பட்டதாரி ஆசிரியர்
சங்க மாநிலதலைவர் இளங்கோவன்
காரைக்குடியில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய
அரசு ஆசிரியருக்கு
இணையாக சம்பளம்
வேண்டும். புதிய
பென்ஷன் திட்டம்
ரத்து உட்பட
15 அம்ச கோரிக்கையை
வலியுறுத்தி 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் அக்.,8ம் தேதி
வேலை நிறுத்தம்
நடத்தப்படும்.
24 சங்கங்களை சேர்ந்த 1.5 லட்சம்
ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். நோட்டீஸ் அளித்தும்,
போராட்டம் நடத்தியும்
அரசு செவிசாய்க்கவில்லை.
பத்தாம் வகுப்பில்
முதல் மதிப்பெண்
பெறும் மாணவர்களை,
அரசே தனியார்
பள்ளியில் கட்டணம்
செலுத்தி படிக்க
வைப்பது வேதனைக்கு
உரியது. எட்டாம்
வகுப்பு வரை
அனைவரும் தேர்ச்சி
என்ற கொள்கையால்,
அரசு பள்ளிகளின்
தேர்ச்சி விகிதம்
குறைகிறது. இத்திட்டத்தை நீக்க வேண்டும். எஸ்.எஸ்.ஏ.,
இடைநிலை கல்வி
திட்டம் மூலம்
ஆசிரியருக்கு தொடர் பயிற்சி அளிக்கின்றனர்.
நிதியை செலவழிக்க வேண்டும்
என்ற நோக்கில்
நடத்தப்படும் இப்பயிற்சியால் பலன் இல்லை. இந்த
நிதி மூலம்
மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தலாம்.
நபார்டு, எஸ்.எஸ்.ஏ.,
மூலம் கட்டப்பட்ட
பல கட்டடங்கள்
சேதமடைந்துள்ளன. பள்ளி கட்டடங்களுக்கு ஒதுக்கும்
நிதி முறைப்படி செலவிடப்படுகிறதா
என்பதை அரசு
கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.
All passnu murpokka sindhichi primary upper primary kuttisuvar aakitaanga...adhigaarigal avrgal pillai galai govt schools LA searkkachollunga....
ReplyDelete