ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை (life certificate) கட்டாயம்
சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர்வருங்கால வைப்பு நிதி அலுவலகம்
தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத்
வெளியிட்டசெய்திக்குறிப்பு:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஓய்வூதியம் பெறுவோர் நவம்பரில் உயிர் வாழ் சான்றிதழை தங்களது வங்கியின் கிளை மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழில் தங்களின் ஓய்வூதிய ஆணை எண்ணையும், செல்லிடப்பேசி எண்ணையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.
விதவை ஓய்வூதியதாரர்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். வங்கி சார்ந்த பணிகளுக்குப் பின்னர், உரிய காலத்துக்குள் வங்கிகள் அந்தச் சான்றிதழ்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.ஆயுள் காலச் சான்றிதழைச் சமர்ப்பிக்காதவர்களுக்கு, 2016-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...