உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில்
அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.999-க்கு விற்பனை
செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா
வைண்ட் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.
லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த
ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் ஆஃப்பர்களுடன் மட்டும்
வெளிவருகிறது. மற்ற சாதாரண என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களை போலவே இதிலும்,
பேஸ்புக், வாட்ஸ்ஆப், இமெயில் வசதிகள் இருக்கும். முதல் ஒரு ஆண்டுக்கு
பேஸ்புக், வாட்ஸ்ஆப் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும், 2ஜி
நெட்வொர்க் மட்டுமே இந்த போனில் பதிவு செய்ய முடியும்.
வரும் டிசம்பர் 28-ம் தேதி ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த
நாள் அன்று இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...