Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரும் 8ம் தேதி ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்' பள்ளிகள் உண்டா; மாணவர்கள் குழப்பம்

       அரசு பள்ளி ஆசிரியர்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 8ம் தேதி, 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுவதால், அன்று பள்ளிகள் இயங்குமா என, பெற்றோர் மற்றும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

          ஆசிரியர்களுக்கான, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான, 'ஜாக்டோ' பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வரும், 8ம் தேதி, தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறும்போது, ''அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், தொகுப்பூதிய காலத்தை முறைப்படுத்துதல் போன்ற கோரிக்கைளை அரசு ஏற்காதது வருத்தமானது. இதே நிலை நீடித்தால், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்பதால் தான் இந்த போராட்டம்,'' என்றார்.

தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறும்போது, ''போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். ஆசிரியர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளனர். பள்ளிகளை மூடுவதோ, மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோ எங்கள் நோக்கம் அல்ல,'' என்றார்.

காலாண்டுத் தேர்வு விடுப்பு முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில், 8ம் தேதி பள்ளிகள் உண்டா, விடுமுறையா என, தெரியாமல், பெற்றோர், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மவுனமாக உள்ளது.

'வாட்ஸ் ஆப்'பில்...:ஜாக்டோ போராட்டத்துக்கு, ஆசிரியர்களும், சங்க நிர்வாகிகளும், 'வாட்ஸ் ஆப்' மூலம் ஆதரவு திரட்டு கின்றனர். 1.50 கோடி ஆசிரியர்களின் ஓட்டுகள் தான், அடுத்த அரசை நிர்ணயிக்கும் என்பதால், கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே, வரும் தேர்தலில் ஆதரவு என்றும், 'வாட்ஸ் ஆப்' பில், தகவல் அனுப்பி வருகின்றனர்.




1 Comments:

  1. Sir Vanakkam Nallai Nadakka irukkum TET Valakkai Patri Yrum Entha Vimarsanamum Seiyamal Irupatharkku Enna Karanam?.. Oru Veli Mari Mugamaga Pani Niyamanm Koduthu Vitargala?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive