Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் கற்பித்தலில் புதுமையான பயிற்சி

         தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், ஸ்டெம் (STEM) எனப்படும் பயிற்சியின் மூலம் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை செயல்விளக்கங்கள் வாயிலாக நடத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

           அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், பட்டதாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பயிற்சி அளிக்க உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது என்றும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




4 Comments:

  1. தமிழ்நாட்டில் எப்போதும் பயிற்சி மட்டும்தான் நடக்கும். ஆசிரியர்களைப்பற்றி எவனும் கவலைப்படுவது கிடையாது. கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றுவது கிடையாது.

    ReplyDelete
  2. குறைகளை எடுத்து சொன்னால் சம்பளம் வாங்கற வேலைய பாருனு சொல்றாங்க.எல்லா துறையிலேயுதான் சம்பளம் வாங்றான். ஆசிரியர்கள் அளவிற்கு வேலை செய்வது இல்லை.எதுக்கு பயிற்சி . கோரிக்கைகள் நிறைவேற்ற நீங்கள் பயிற்சி எடுங்க.

    ReplyDelete
  3. ஆசிரியர்களை பயிற்சிக்கு அனுப்புங்க!
    மாணவர்களை வீட்டிற்கு அனுப்புங்க!!

    ReplyDelete
  4. already RMSA training is total waste. its success rate is just beloe 5%. nobody is interested in this training. Resource Persons and participants both think it as waste of time. just they use this training days as get together.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive