Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம்: மேலும் பலரை நீக்க அரசு திட்டம்

          தமிழகத்தில் ஒரே ஆண்டில் 5.08 லட்சம் பேருக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டது. மத்திய அரசின் அதிக பங்களிப்புடன் தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது.


         மாநில அளவில் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவி திட்டம், தேசிய விதவையர் திட்டம், ஆதரவற்ற மாற்று திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்புதிட்டம், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் திட்டம், 50 வயதான, திருமணம் ஆகாத, ஏழை பெண்கள் ஓய்வூதிய திட்டம், இலங்கை அகதிகளுக்கான உதவி திட்டம் என 9 வகையான திட்டங்கள்நடைமுறையில் இருக்கிறது.இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் 50 சதவீத நிதி உதவி கிடைக்கிறது. ஆனால், தற்போது பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011-2012ம் ஆண்டில் 26,45,537 பேரும், 2012-2013ம் ஆண்டில் 30,76,397 பேரும் பயன் பெற்றனர். 2013-2014ம் ஆண்டில் 36,24,063 பேர் பயன் அடைந்தனர். நடப்பாண்டில் 2015 மார்ச் வரை 31,15,777 பேர் மட்டுமே பயனாளிகளாக உள்ளனர். 50 வயதான, திருமணமாகாத ஏழை பெண்கள் திட்டத்தில் 22,259 பேர் பயன்பெற்றனர். இவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் 21,016 ஆக குறைக்கப்பட்டது.

கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 1,32,022-ல் இருந்து 1,19,759 ஆகவும், உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகள் எண்ணிக்கை 7,89,460-ல் இருந்து 3,35,251 ஆகவும் குறைந்துவிட்டது. 6,49,683 ஆக இருந்த விதவையர் 5,84,413 ஆக குறைக்கப்பட்டது.கடந்த ஆண்டில் இந்திராகாந்தி முதியோர் உதவி தொகை 12,82,582 பேருக்குவழங்கப்பட்டது. நடப்பாண்டில் 13,63,925 பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில் 5,08,286பயனாளிகள் உதவி திட்டத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதன்மூலமாக அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5.08 கோடி என, ஆண்டுக்கு ரூ.62 ேகாடி வருவாய் சேமிக்கப்பட்டது. மேலும், பயனாளிகள் குறைப்பு பணி தீவிரமாக நடக்கிறது. அடுத்த ஆண்டில், 6 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வயதாகி இறந்தார்களா...?
ஒரே ஆண்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டத்தினர், இறந்தவர்களின் பெயரில் உதவி தொகை பெறப்பட்டது. அதை கண்டறிந்து பட்டியலில் இருந்து நீக்கி விட்டோம். 5 லட்சம் பேர் இறந்திருக்கலாம் என்ற தகவலும் வெளியானது.
இப்போது பயோ மெட்ரிக் முறை வந்து விட்டது. ரேகை வைத்துதான்உதவி தொகை பெற முடியும் என்றனர்.அப்படி இருந்தால் கடந்த காலங்களில் ஆண்டுதோறும் 5 முதல் 6 லட்சம் பயனாளிகள்கூடுதலாக சேர்க்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியது. கணக்கெடுப்பு, பயனாளிகள்சேர்ப்பில் குளறுபடி இருந்தது. வசதியான சிலரை பட்டியலில் சேர்த்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் காலியாகவும் கஜானாவின் இருப்பை தக்க வைக்கவே பயனாளிகளை பட்டியலில் இருந்து நீக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive