அறிவியல் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது
தொடர்பானவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இயக்கப்படும்
“அறிவியல்எக்ஸ்பிரஸ்' ரயில் கடந்த 2007-ம் ஆண்டு முதன் முதலாக
அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு தட்பவெப்ப நிலை மாற்றம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு
ஏற்படுத்தவுள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்,
தடுக்கும் முறைகள், இயற்கையை பாதுகாப்பது தொடர்பாக கண்காட்சி, படங்கள்
ஆகியவை ரயிலில் இடம்பெற்றுள்ளன.அறிவியல் எக்ஸ்பிரஸ் கடந்த 15-ம் தேதி
புதுடெல்லியில் புறப்பட்டது.
20 மாநிலங்களில் சுமார் 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு பயணிக்கும் அறிவியல்
எக்ஸ்பிரஸ், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி வேலூர் வழியாக
வந்து கும்பகோணம், ராமேஸ்வரம், புதுக்கோட்டை, திருநெல்வேலிஆகிய 5
இடங்களில் மொத்தம் 17 நாட்கள் நிறுத்தி வைக்கப் படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...