போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட, 7,243 நர்சுகளில், 5,500 பேர்
பணியில் சேர்ந்துஉள்ளனர். அரசு மருத்துவமனைகளில், தேவைக்கேற்ப நர்சுகளை
நியமிக்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், போட்டி தேர்வு
நடத்தப்பட்டது. இதில், 7,243 பேர் தொகுப்பூதிய பணிக்கு தேர்வு
செய்யப்பட்டனர்.
இவர்களில், ஐந்து பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா, செப்டம்பர் முதல்
வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கினார். அதன்பின், 5,500 பேருக்கு பணி நியமன
ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
'படிப்படியாக, 5,500 நர்சுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, பணியில்
சேர்ந்துள்ளனர்.
'அரசு மருத்துவமனைகளில், காலியாக உள்ள இடங்கள் விவரம் பெறப்பட்டு
வருகிறது. மீதமுள்ளோருக்கும், விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும்'
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...