திண்டுக்கல்: பள்ளி குழந்தைகள் சீருடை தைப்பதற்கு, 45.37 கோடி நிதியை
அரசு, சமூகநலத்துறைக்கு வழங்கியுள்ளது.சமூகநலத்துறை சார்பில் ௧ம் வகுப்பு
முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான, 4 ஜோடி சீருடைகள்
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.தற்போது முதல் ஜோடி சீருடைகள் தைப்பதற்கான
நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தையல் கூலியாக அரைக்கால் சட்டை, சட்டைக்கு தலா
22.05 ரூபாயும், முழு கால்சட்டை ஒன்றுக்கு, 55.13 ரூபாயும், முழு நீள
சட்டைக்கு (6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) 27.56 ரூபாயும், ஸ்கர்ட்
ஒன்றுக்கு,16.54 ரூபாயும், மாணவியரின் சட்டை ஒன்றுக்கு,19.85 ரூபாயும்
சல்வார் கம்மீஸ் ஒன்றுக்கு, 55.13 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி சமூகநலத்துறை சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு
பிரித்து வழங்கப்பட உள்ளன.முதல் பருவ 2 ஜோடி சீருடைகளுக்கு தையல் கூலியாக,
45 கோடியே 37 லட்சத்து 80 ஆயிரத்து 827 ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதில், 50
சதவீதத் தொகையான, 21 கோடியே 95 லட்சத்து 27 ஆயிரத்து 676 ரூபாய் ஏற்கனவே
வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள, 23 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 151
ரூபாய் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிதியை அந்தந்த மாவட்ட சமூக
நலத்துறையின் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற
உள்ளது.
சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மகளிர் சுய உதவிகுழு
கூட்டுறவு தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும்' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...