பள்ளி
குழந்தைகள் சீருடை தைப்பதற்கு ரூ.45.37 கோடி நிதியை அரசு சமூகநலத்துறைக்கு
வழங்கியுள்ளது.சமூகநலத்துறை சார்பில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும்
மாணவ, மாணவிகளுக்கான 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும்.
தற்போது முதல் ஜோடி சீருடைகள் தைப்பதற்கான நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தையல் கூலியாக அரைக்கால் சட்டை, சட்டைக்கு தலா ரூ.22.05ம், முழு கால்சட்டை ஒன்றுக்கு ரூ.55.13ம், முழு நீள சட்டைக்கு (6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) ரூ.27.56ம், ஸ்கர்ட் ஒன்றுக்கு ரூ.16.54ம், மாணவிகளின் சட்டை ஒன்றுக்கு ரூ.19.85ம் சல்வார் கம்மீஸ் ஒன்றுக்கு ரூ.55.13ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி சமூகநலத்துறை சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன.முதல் பருவ 2 ஜோடி சீருடைகளுக்கு தையற்கூலியாக ரூ.45 கோடியே 37 லட்சத்து 80
ஆயிரத்து 827 ஒதுக்கப்பட்டது. அதில், 50 சதவீதத் தொகையான ரூ.21 கோடியே 95 லட்சத்து 27 ஆயிரத்து 676 ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ரூ.23 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 151 விரைவில் வழங்கப்பட உள்ளது.
இந்த நிதியை அந்தந்த மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது.
சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மகளிர் சுய உதவிகுழு கூட்டுறவு தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...