இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 450
பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இந்த ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி
ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கான பணியிட
மாறுதல் கலந்தாய்வு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டது. இதில்
மாவட்டத்துக்குள் 1,310 பட்டதாரி ஆசிரியர்களும், மாவட்டம் விட்டு மாவட்டம்
555 பேரும் இடமாறுதல் பெற்றனர்.
இதையடுத்து, இப்போது 900-க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 450 இடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட
உள்ளன. இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள்
ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஆன்-லைன் பதவி உயர்வு கலந்தாய்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Appo TET clear pannitu wait panra engaluku eppo job kidaikum
ReplyDelete