Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.40,000 சம்பளத்தில் வேலை: அறநிலைய துறை அறிவிப்பு

       நகைகளை சரிபார்க்கும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து, அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

          அறநிலைய துறையில், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை சரிபார்க்கவும்,மதிப்பிடவும் குழு இருக்கிறது. இந்தக் குழுவில், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு, நான்கு இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த வேலைக்கு, இந்து மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பள்ளி இறுதித் தேர்வு தேர்ச்சி பெற்று, 28 - 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.தங்கம், வெள்ளி நகை செய்தல், தாமிரம் போன்ற உலோக தகடுகள் மீது தங்க முலாம் பூசுதல் ஆகிய வேலை தெரிந்திருக்க வேண்டும்.

மேலும், விலை மதிப்புள்ள பொருட்கள் பற்றி நுட்பமான தொழில் அனுபவம், நவரத்தின கற்களின் தரம் அறியும் திறன் இருக்க வேண்டும்.பொற்கொல்லர் தொழில், நகை வினியோகஸ்தர் மற்றும் வர்த்தகராக, ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை, www.tnhrce.org என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34' என்ற முகவரிக்கு, நவ., 15க்குள் அனுப்ப வேண்டும். பணிக்கான ஊதிய விகிதம், 9,300 - 34,800 ரூபாய், 4,200 ரூபாய் தர ஊதியம் மற்றும் விதிமுறைப்படி படிகள் வழங்கப்படும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive