Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் ஜாதி, வருமானச் சான்று வழங்க உத்தரவு

       பள்ளி மாணவ, மாணவியருக்கு 3 மாதங்களுக்குள் ஜாதி, வருமான, இருப்பிடச் சான்றுகளை வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

        தமிழகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்களில் உள்ள பொதுசேவை மையங்கள் மூலம் ஜாதி, இருப்பிட, வருமானச் சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு படிக்கும் காலத்திலேயே பள்ளிகள் மூலம் சான்றிதழ்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 6, 10, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியர் மேல்படிப்புக்காக பிற பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்ல நேரிடும். மேலும், 10, பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்படுகிறது.

இதுபோன்ற நேரங்களில், கல்வி சான்றிதழ்களுடன், ஜாதிச் சான்றும் முக்கியத் தேவையாக உள்ளது.

அதேபோல் மத்திய, மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையைப் பெற ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றுகள் மிகவும் அவசியம். இந்த சான்றுகள் கிடைக்காத மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற முடியாமல், கல்வியைப் பாதியில் விடும் நிலை ஏற்படலாம்.

இதை தவிர்ப்பதற்காக பள்ளிகள் மூலமே மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவியரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவாய்த் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவற்றை வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக விசாரித்து சான்றிதழ்களை அளித்து வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு 6, 10, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 3 சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது. 

அதனால், இந்த ஆண்டு மாணவர்களுக்கு 3 மாதங்களுக்குள் 3 சான்றிதழ்களையும் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாணவ, மாணவியரின் விவரங்களைச் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.




1 Comments:

  1. Indeed, all striking teachers would have protested and demonstrated against the irrelevant works in the school such as "Issue of Community Certificate, Free items to Students, Employment Registration to X, XII passed students, and so many incidental works of "Non-teaching Staff". Only for this reason, they had to undergo strike for public support, but they put in so many demands, which are not at all digestable and agreed upon. So many matriculation teachers are getting very meagre pay of Rs. 7500 to 10000 per month, without job security too. Will the Govt. Teachers come forward to take the matriculation school teachers to their shelter and voice their concern through strike ? Just think and realise please.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive