பிளஸ்2 காலாண்டுத் தேர்வில் மாணவர்களின் விடைத்தாள்களைப் பரிமாற்ற
முறையில் மதிப்பீடு செய்யக்கூடாது என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
கழகத்தின் மாவட்டச் செயலர் த.பாபுசெல்வன், தலைவர் பெ.சண்முகப்பாண்டியன்,
பொருளாளர் சு.வேல்முருகன் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்
அளித்துள்ள மனு:
திருநெல்வேலி மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் இம் மாதம் நடைபெறும்
பிளஸ்2 காலாண்டு தேர்வில் மாணவர்களின் விடைத்தாள்களை பறிமாற்றம் செய்து
மதிப்பீடு செய்ய அனுமதிப்பதை ரத்து செய்ய வேண்டும். அந்தந்த பள்ளிகளின்
முதுநிலை பாட ஆசிரியர்களே விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
அரசாணையோ, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் எதுவும் இல்லாத
நிலையில் சேரன்மகாதேவியில் ஒரு பள்ளியில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோ
மெட்ரிக் முறையில் நடைமுறைப்படுத்துவது கண்டனத்துக்குரியதாகும். மேலும்,
ஆவரைக்குளம் பள்ளியின் முதுநிலை ஆசிரியரை தாற்காலிக பணியிட நீக்கம்
செய்யப்பட்டதை ரத்து செய்து மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என மனுவில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...