Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர் விடுதியில் 25 சமையலர் காலி பணியிடம்: அக்.30-க்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 14 ஆண் மற்றும் 11 பெண் சமையலர் பணியிடங்களுக்கு அக்டோபர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 


சமையலர் பணிக்கான ஊதிய விகிதம் ரூ.4800-10000 (தர ஊதியம் ரூ.1300). நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படும். விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2015-ல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18-35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18-32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18-30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பராக இருக்க வேண்டும்.

இத்தகுதிகளுடன் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் முழு நேர சமையலர் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தகப்பனார் பெயர், பாலினம், பிறந்ததேதி, அஞ்சல் முகவரி அஞ்சல் குறியீட்டு எண்ணுடன், கல்வித் தகுதி, சாதி, முன்னுரிமை விவரம் ஏதேனும் இருப்பின் குறிப்பிடவும் (விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், கலப்புத் திருமணம்), 

வேலைவாய்ப்பு பதிவு விவரம் (இருப்பின்), குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகிய விவரங்களுடன் மற்றும் சான்றிதழ்களின் சான்று நகழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.10.2015-ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்குப் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. கூர்ந்தாய்வுக்குப் பின் தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்காணல் நடைபெறும். 

அதன் விவரம் தனியே தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive