தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக் கீட்டின் கீழ் ஏழை மாணவர்களைச் சேர்த்த
தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு 10 நாளில் கல்விக் கட்டணத் தொகை
வழங்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி
உறுதி அளித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் மற்றும் நலிவடைந்த
பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அந்த மாணவர்களுக் கான கல்விக் கட்டணத்தை பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு வழங்கும்.அந்த வகையில், 2013-14, 2014-15 கல்வி ஆண்டுகளில் ஏழை மாணவர்களை சேர்த்துக்கொண்ட தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.97 கோடி ஒதுக்கியது. மெட்ரிக் பள்ளிகளுக்கு உரிய கல்விக் கட்டணத் தொகை பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு அத்தொகை இன்னும் கிடைக்கவில்லை. மொத்த பள்ளிகளில் 75 சதவீத பள்ளிகள் நர்சரி, பிரைமரி பள்ளிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னையில் அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) மாநில இயக்குநர் பூஜா குல்கர்னியை தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.நந்தகுமார் தலைமையில் வேலூர் மாவட்ட தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.ராஜா, செயலாளர் எம்.விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று நேரில்சந்தித்து பேசினர். அப்போது 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவ, மாணவிகளைச் சேர்ந்த மழலையர் பள்ளிகளுக்கு 2013-14, 2014-15-ம் ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கோரினர்.நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத் தொகை 10 நாளில் வழங்கப்படும் என்று பூஜா குல்கர்னி உறுதி அளித்ததாக கூட்டமைப்பின் செயலாளர் விஜயகுமார் தெரிவித்தார்.ஏழை மாணவர்களை சேர்த்துக்கொண்ட தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக தமிழகஅரசு ரூ.97 கோடி ஒதுக்கியது.
Very.good
ReplyDelete