கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுதல் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 229 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்ற ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கரூரில் 150 மருத்துவ மாணாக்கர் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.இதன் அடிப்படையில் கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுதல் மற்றும் மருத்துவக் கல்லூரிமருத்துவமனை அமைப்பதற்காக 229 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர, புதுக்கோட்டையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி 150 மாணாக்கர் சேர்க்கையுடன் அமைக்கப்படும் என்று முதல்வர் கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில், புதுக்கோட்டையில் புதியதாக ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான ஒப்புதலை முதல்வர் வழங்கிஉத்தரவிட்டுள்ளார்.மேலும், ஆயத்தப் பணிகளுக்காக ஒரு சிறப்பு அலுவலர் / முதல்வர் பணியிடத்தினை உருவாக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இம்மருத்துவக் கல்லூரி சுமார் 200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ithe.pola.tamilaga.chiefminister..avarkal....puthiya..........pattathariteacherin.list..eppothu..veliyida.solluvar..
ReplyDelete