மதுபானங்களை 21 வயதுக்குள்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதைத் தடுக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு
உறுதியளித்துள்ளது.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள், மதுக்கூடங்கள்) விதிகள்
2003, விதி எண் 11 ஏ-வின்படி, 21 வயது நிரம்பப் பெறாதவர்களுக்கு மது
விற்கப்பட மாட்டாது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
இதுதவிர, 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் மது விற்பனைச் செய்வதை
உறுதிசெய்ய, முறையான சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு
உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்து, தலைமை
நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு
பிறப்பித்த உத்தரவு:
மதுபானங்களை பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வயது வரம்பு
விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்துவது அவசியம். வாங்குபவரின் வயதில்
சந்தேகம் ஏற்பட்டால், அவரது வயதை விற்பனையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்
என அறிவுறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இந்த விதிமுறைகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு
தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் உறுதியளித்தார். எனவே, இந்த
வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நல்ல செய்திதான். 21வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மது விற்கக்கூடாது என டாஸ்மார்க் ஊழியர்களை கட்டுப்படுத்துவது முக்கியமல்ல. 21வயதுக்கு கீழ் குடித்துவிட்டு அலையும் நபர்களை சீர்திருதத சிறை என்று ஒன்றை உருவாக்கி அதில் அவர்களை நல்வழிப்படுததி... தொழிலை கற்றக்கொடுத்து... உபயோகமுள்ள மனிதர்களாக மாற்ற நடவடிக்கை வேண்டும்
ReplyDelete