மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது, உடல் இயங்கியல் அல்லது மருந்தியல் துறைக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2015-ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு, வில்லியம் சி.கம்ப்பெல், சடோசி ஓமுரா மற்றும் யுயு து ஆகிய மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோபல் பரிசு இரண்டு கண்டுபிடிப்புகளாக, இரு பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஒன்று, நாக்குப் பூச்சு ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சிகிச்சை முறை குறித்து ஆய்வு செய்ததற்காக வில்லியம் சி.கம்ப்பெல் மற்றும் சடோசி ஓமுரா ஆகியோருக்கும், மற்றொன்று, மலேரியாவிற்கான சிகிச்சை முறை குறித்து கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதற்காக யுயு து என்ற பெண்மணிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...