போட்டித்தேர்வில் பங்கேற்பதற்காக 2000 மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி கல்வித்துறை பயிற்சி அளித்து வருகிறது. இது
குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: பொருளாதாரத்தில்
பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் சென்னை
மாநகராட்சி பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்படி, மத்திய தேர்வாணயம்
நடத்தும் போட்டித் தேர்வுக்கு ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் மாணவர்களுக்கு
பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், கடந்தாண்டு போட்டித்தேர்வில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதில் 11 பேர் வெற்றி பெற்றனர். இதையடுத்து, குரூப்-1, குரூப் 2 தேர்வுக்கு அதிகளவில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது, சிவில் சர்வீஸ் தேர்வுக்காக 2000-த்துக்கும் அதிகமான மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதேபோல், சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குரூப் 1 போட்டித்தேர்வுக்கு 350 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...