Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.எட். படிப்பில் சேர 2-வது கட்ட கலந்தாய்வு: 14 முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது

       பி.எட். படிப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்தது. 2-வது கட்ட கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பி.எட். கல்லூரி வளாகத்தில் 14-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினர்களுக்கும், கணிதம் படித்த மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.


        14-ந் தேதி பகல் 1 மணிக்கு கணிதம் படித்த மாணவர்களுக்கு நடக்கிறது.15-ந் தேதி காலை 9 மணிக்கு இயற்பியல் படித்தவர்களுக்கும், 10 மணிக்கு தாவரவியல் படித்தவர்களுக்கும், பகல் 1 மணிக்கு வேதியியல் படித்தவர்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு விலங்கியல் படித்தவர்களுக்கும், 16-ந் தேதி காலை 9 மணிக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் புவியியல் படித்தவர்களுக்கும், பகல் 1 மணிக்குவரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணினி அறிவியல், மனை அறிவியல் படித்தவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive