Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் 1 தேர்வு: விண்ணப்ப நிலவரம் இணையதளத்தில் வெளியீடு

          குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டனவா என்பது குறித்த விவரம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

 
              குரூப் 1 தொகுதியில் காலியாகவுள்ள 74 பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கென 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பம்-தேர்வுக் கட்டணங்கள் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தேர்வாணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
               சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பம்-தேர்வுக்கட்டணம் செலுத்தியிருந்தும் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரம் இணையதளத்தில் இல்லாவிட்டால், பணம் செலுத்தியதற்கான ரசீதின் (Challan) நகலுடன் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு, வரும் 13-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.




6 Comments:

  1. வரும் வெள்ளிகிழமை மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை Tnpsc வெளியிட போகிறது. அந்த அறிவிப்பு பெரும்பாலானவர்களின் வாழ்க்கையை நிர்ணயக்க போகிறது.

    ReplyDelete
  2. வரும் வெள்ளிகிழமை மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை Tnpsc வெளியிட போகிறது. அந்த அறிவிப்பு பெரும்பாலானவர்களின் வாழ்க்கையை நிர்ணயக்க போகிறது.

    ReplyDelete
  3. Mr.maruthu sir edarku sambanda patta news varalam

    ReplyDelete
  4. Mr.maruthu sir edarku sambanda patta news varalam

    ReplyDelete
  5. Mr.maruthu sir edarku sambanda patta news varalam

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive