ஊட்டி,:''கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால், ஜன., 19ம் தேதி முதல்,
காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க
மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அவர் அளித்த பேட்டி:தமிழக அரசு துறைகளில்,
இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்பாமல், அரசு மெத்தனம்
காட்டி வருகிறது. பணிச்சுமை, மன அழுத்தம், அதிகாரிகளின் அச்சுறுத்தல்
போன்றவை காரணமாக, ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.தொகுப்பூதிய அடிப்படையில்
பணியாற்றும், 3.5 லட்சம் ஊழியர்களிடம், அரசு, அடக்குமுறையை கையாள்கிறது.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை
நிறைவேற்றக்கோரி, டிச., 22ல், முதல்வரை சந்திக்க உள்ளோம். அதற்கு பிறகும்
தீர்வு கிடைக்கவில்லை எனில், வரும், ஜன., 19ம் தேதி முதல், காலவரையற்ற வேலை
நிறுத்தம் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...