வெளி மாவட்டங்களில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் 18 பேருக்கு மதுரை மாவட்டத்துக்கு இடமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.
வெளிமாவட்டங்களில் இருந்து மதுரைக்கு பணியிட
மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல்
கலந்தாய்வு மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது. தமிழ் 4, ஆங்கிலம் 2, கணிதம் 2, சமூக அறிவியல் 10 என மொத்தம்
18 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதற்கு தமிழ் 47,
ஆங்கிலம் 54, கணிதம் 55, சமூக அறிவியல் 48 என 204 ஆசிரியர்கள்
விண்ணப்பித்திருந்தனர். பணி மூப்பு, முன்னுரிமை அடிப்படையில் 18
ஆசிரியர்களுக்கு இடமாறுதல் உத்தரவுகளை முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ
இருதயசாமி வழங்கினார்.
மதுரை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...