சென்னை உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு அக். 17 முதல்
25 வரை தசரா விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 20-ஆம் தேதி
விடுமுறைக் கால நீதிமன்றம் இயங்குகிறது.இதுதொடர்பாக உயர்நீதிமன்றப்
பதிவாளர் (பொது) பொன்.கலையரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தசரா பண்டிகையை முன்னிட்டு, அக். 17 முதல் 25 வரை உயர்நீதிமன்றத்துக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் விடுமுறைக்கால அலுவலர்கள்
செயல்படுவர்.அவசர வழக்குகளுக்கான மனுக்களை 19-ஆம் தேதி பிற்பகல் 1.30
மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.20-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை
4.45 மணி வரை விடுமுறைக்கால நீதிமன்றம் இயங்கும் உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் டி.மதிவாணன், எஸ்.வைத்தியநாதன்
ஆகியோர் அடங்கிய அமர்வும், மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை
நீதிபதிகள் சி.டி.செல்வம், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வும்
விசாரணை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...