ஆன்–லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தற்போது தடை உள்ளது. இந்த
சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஆன்–லைனில்
மருந்து விற்பனையை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 14–ந்தேதி
(புதன் கிழமை) நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்படுகிறது.தமிழகத்தில்
40 ஆயிரம் மருந்து கடைகள் உள்ளன.
இந்த கடைகள் அனைத்தும் புதன்கிழமை அதிகாலை 6 மணி முதல் மறுநாள் (வியாழக் கிழமை) காலை 6 மணி வரை மூடப்படும் என்று மருந்து கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.இந்தியா முழுவதும் 8 லட்சம் மருந்து கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 700 கடைகள் இருக்கின்றன. தமிழகத்தில் தினமும் ரூ.55 கோடிக்கு மருந்து விற்பனையாகிறது. கடை அடைப்பினால் கோடி கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...