இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில்நுட்பத்தை அனுமதியின்றி திருடி பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆயிரத்து நானூறு கோடி ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்களை உள்ளடக்கிய 4 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலையின் கீழ் செயல்படும் முன்னாள் மாணவர்களின் ஆராய்ச்சி அமைப்புக்கு சாப்ட்வேர் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி இருந்தனர். அதிவேகமாக செயல்படக்கூடி இந்த தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையையும் இவர்கள் பெற்றிருந்தனர்.
இவர்கள் உருவாக்கிய இந்த நவீன தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாக, அமெரிக்காவின் மேடிசன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியன் கோன்லி, விஸ்கான்சின் பல்கலைகழக ஆராய்ச்சி அமைப்புக்கு, ரூ.1,400 கோடி ரூபாயை இழப்பீடாக ஆப்பிள் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த தீர்ப்பு, எங்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் உழைப்புக்கு கிடைத்த பெரும் வெற்றி என விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சி பிரிவின் தலைவர் கார்ல் குல்பிரான்ட்சென் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...