புதுக்கோட்டை
மாவட்டத்தில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளி மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா.
மாண்புமிகு மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சா் டாக்டா் சி.விஜயபாஸ்கா் சான்றிதழ் மற்றும்
கேடயங்கள் வழங்கி பாராட்டு.
மார்ச்2015-ல்
நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100 சதவீத
தோ்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் 100 சதவீத தோ்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியா்கள், தாங்கள்
கற்பித்த பாடங்களில் நூற்றுக்கு நூறு, இருநுறுக்கு இருநூறு, மதிப்பெண் பெற்றுத்தந்த
ஆசிரியா்கள், மாநில மற்றும் தேசிய அளவில் நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியா்கள், மாநில
மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் மாணவ, மாணவிகளை சாதனை பெறச்செய்த உடற்கல்வி
இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள். ஆகியோருக்கு பாராட்டு விழா புதுக்கோட்டை
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவா்
திரு சு.கணேஷ் தலைமை வகித்தார். விழாவிற்கு வந்திருந்த அனைவைரையும் மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலர் திருமதி செ.சாந்தி வரவேற்று பேசினார். இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சா் மாண்புமிகு டாக்டா் சி. விஜயபாஸ்கா் கலந்துகொண்டு மாநில மற்றும் தேசிய அளவில்
நல்லாசியா் விருதுபெற்ற 14 ஆசிரியா்கள், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100 சதவீத
தோ்ச்சி பெற்ற 102 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில்
100 சதவீத தோ்ச்சி பெற்ற 23 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள். 100 சதவீத தோ்ச்சி மற்றும்
நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுத்தந்த 1093 பட்டதாரி ஆசிரியா்கள். 100 சதவீத தோ்ச்சி
மற்றும் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண் பெற்றுத்தந்த 383 முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள்,
மாநில,தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் மாணவா்களை பங்கேற்க செய்து வெற்றி பெறச்
செய்த 37 உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள். ஆகியோர்களுக்கு சான்றிதழ்களையும்.
கேடயங்களையும். வழங்கி கடந்த 3 ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு
அரசு பொதுத்தோ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தின் தோ்ச்சி சதவீதம் உயா்ந்துள்ளதை புள்ளி
விவரங்களுடன் பட்டியலிட்டு அதன்மூலம் பதினொன்றாம் வகுப்பு வகுப்பில் அரசுப்பள்ளிகளில்
மாணவா்களின் சோ்க்கை சதவீதம் உயா்ந்துள்ளதையும் குறிப்பிட்டு புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்
துறையினை பாராட்டி சிறப்பித்து பேசினார். மேலும்
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவா்களுக்குரியமெல்லக் கற்போருக்கான
கையேடுகளை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை
சட்டமன்ற உறுப்பினா் திரு வி.ஆா்.கார்த்திக்தொண்டைமான், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினா்
திரு மு. ராஜநாயகம், ஆகியோர் கலந்துகொண்டு முன்னிலை வகித்து சிறப்பித்தனா். இவ்விழாவில்
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சித்தலைவா் திரு வி.சி.ராமையா, புதுக்கோட்டை நகா்மன்றத்தலைவா்
திரு ரா. இராஜசேகரன், மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவா் திரு ஆர்.சந்திரன், புதுக்கோட்டை
நகா் மன்றத்துணைத்தலைவா் திரு எஸ்.ஏ.எஸ். சேட்(எ) அப்துல்ரஹ்மான், 40-வது நகா்மன்ற
உறுப்பினா் திருமதி ஈஸ்வரிநடராஜன், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலா்
திரு க.கணேசன், புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்(பொ)
திரு நா. செல்லத்துரை, புதுக்கோட்டை மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலா் திரு மா.தமிழ்செல்வன்,
அறந்தாங்கி கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர்(பொ) திரு ஆா். சண்முகம் மற்றும் பலா்
கலந்துகொண்டனா். நிறைவாக புதுக்கோட்டை கல்வி மாவட்ட மாவட்டகல்வி அலுவலா்(பொ) திரு ப.மாணிக்கம்
நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் திருமதி
செ.சாந்தி தலைமையில் அமைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட குழுவினா் சிறப்பாக செய்திருந்தனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...