Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு நவீனமயம்

       தமிழக சுகாதார துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் பதவிக்கான, 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நேற்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.சென்னையில், 21, உட்பட 32 மையங்களில், தேர்வுகள் நடந்தன.


          சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், தேர்வு நடைமுறையை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்து, 149 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வின், 'கீ' விடைத்தாள் ஒரு வாரத்திலும், தேர்வு முடிவு ஒரு வாரத்திலும் வெளியாகும்.டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, குறிப்பிட்ட அளவு தேர்வு கட்டண சலுகை உள்ளது. பட்டியலினத்தவருக்கு முழுவதும் சலுகை உள்ளது. இந்தசலுகை தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் குறிப்பிடும் விவரங்களில், சில நேரங்களில் தவறுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.மேலும், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தேர்வர்கள் ஒருமுறை பதிவில் (ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்) அளித்துள்ள கல்வித் தகுதி விவரங்கள், தேர்வு முடிவின் போது, சான்றிதழ் சரிபார்ப்பில் மாறுதலாக உள்ளது.

இதைத் தடுக்க, 'டேஷ் போர்ட்' என்ற புதிய முறை விரைவில் அறிமுகமாகும். டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் சுயவிவரப் பக்கம் உருவாக்கப்படும். தேர்வர்கள் தங்களின் பெயர், கல்வித்தகுதி உள்ளிட்டவற்றை, 'அப்டேட்' செய்யலாம். இந்தத் தகவல் அடிப்படையில், தேர்வர்களின் கட்டண சலுகை குளறுபடியின்றி கணக்கிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive