Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC சார்பில் மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு

       மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 3 மாவட்டங்களில் வருகிற 20ம் தேதி  நடக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மகப்பேறு மற்றும் குழந்தை நல சுகாதார அலுவலர் பதவியில் காலியாக உள்ள 89 காலி  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 31ம் தேதி வெளியிட்டது.  

          கல்வி தகுதியாக பி.எஸ்.சி. நர்சிங் அல்லது பிஎஸ்சி(பப்ளிக்  ஹெல்த் நர்சிங்) படித்திருக்க ேவண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான எழுத்து தேர்வு வருகிற 20ம் தேதி சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட  3 மாவட்டங்களில் நடக்கிறது.

காலை 10 மணி முதல் 1 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுகிறது. காலை 10  மணிக்கு தேர்வுக் கூடத்துக்கு உள்ளே வந்து விட வேண்டும். இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளமான  www.tnpsc.gov.inல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து ஹால்  டிக்கெட்டை(நுழைவு சீட்டு) டவுன் லோடு செய்து கொள்ளலாம். 

நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா? என்பதை நிராகரிப்பு பட்டியலில் கண்டறியலாம்.  ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத தொலைபேசியிலோ அல்லது  contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive