Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Microsoft Cloud Computing Service Starts in Tamilnadu

        தமிழகத்தை டிஜிட்டல்மயமாக்க உதவும் மைக்ரோசாப்ட் மேகக்கணினி சேவை: முதல்வர்ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

         சென்னையில் மைக்ரோசாப்ட் நிறு வனம் அமைத்துள்ள தரவு மையத் தில் இருந்து வழங்கப்படும் மேகக் கணினி சேவையை முதல்வர் ஜெய லலிதா நேற்று தொடங்கி வைத்தார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


            தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் கணினி சார் தேவைகளுக்கானஉள்கட்டமைப்பை ஏற்படுத்த அதிகம் செலவிட வேண்டியுள் ளது. அவர்களது தரவுகளை சேமிக்கவும், பாதுகாக்கவும் வெளிநாடுகளில் உள்ள தரவு மையங்களை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.நம் நாட்டில் செயல்படும் நிறு வனங்களின் தரவுகள் நம் நாட்டி லேயே சேமித்துபாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு நடை முறையில் உள்ளது. அதன்படி பயனீட்டாளர்கள் அவர்களது பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தி மேகக் கணினி (Cloud Computing) சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன்மூலம் கணினிசார் கட் டமைப்புக்காக நிறுவனங்கள் செல விடும் நிதி பெருமளவு குறையும்.இந்நிலையை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறு வனம், இந்தியாவிலேயே முதல் முறையாக 3 தரவு மையங்களை அமைக்கவும், அவற்றின் மூலம் மேகக் கணினி சேவைகளைவழங்கவும் நடவடிக்கை எடுத் துள்ளது.

அதில் ஒன்றான சென்னையில் அமைக்கப்பட் டுள்ள தரவு மையம் வழியாக மேகக் கணினி சேவையை தலை மைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தை டிஜிட்டல் மயமாக்க இந்த சேவை பெரிதும் உதவும்.இந்நிகழ்ச்சியில் மைக்ரோ சாப்ட் (இந்தியா) நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்கரண் பஜ்வா கலந்து கொண்டார். அவரிடம் முதல்வர், ‘‘தமிழகத்தில் மைக்ரோசாப்ட் தொடங்கியுள்ள சேவையை வரவேற்பதுடன், பெருமகிழ்ச்சி அடைகிறேன்.மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்’’ என்றார்.




1 Comments:

  1. அரசு பள்ளி மாணவர்களின் கணினி கனவு

    அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் (ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை)
    கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக கொண்டுவர வேண்டும் .

    மேனிலைப்பள்ளி தற்போது தரம் உயர்த்தப்பட்ட மேனிலைப்பள்ளிகளில் (11மற்றும் 12ஆம் வகுப்பு) பல பள்ளியில் கணிப்பொறி அறிவியல் பாடம் இல்லை. ஆசிரியர்களும் இல்லை கணிப்பொறி அறிவியல் பாடம் கொண்டு வரவேண்டும்.
    றகுறிப்பு(அரசு பள்ளியில் மாணவர்கள்
    அதிகம் கணினி அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்கின்றனர்).

    மாணவர்களின் விகிதம் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
    குறிப்பு(300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு மேனிலைப்பள்ளியில் ஒரு கணினி ஆசிரியர் மட்டும் உள்ளார்).

    சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் பெறும் வரவேற்ப்பை பெற்றது ஆனால் சில மாதத்தில் கைவிடப்பட்டது.
    (அனைத்து தனியார் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் கட்டாயப்பாடமாக உள்ளது).

    மாணவர்களின் நலனுக்காக....
    புதிய கல்விக் கொள்கையில் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்பாடமாக அறிவிக்க வேண்டும். (December ல் புதிய கல்வி கொள்கை _ ஸ்மிருதி இரானி உறுதி . மக்களிடம் கருத்துக் கேட்கப் படும் என அறிவிப்பு தங்கள் ஒருவரின் உதவியால் கூட1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வரைகணினி அறிவியல் கல்வியை தமிழகத்தில் கொண்டுவர முடியும்).


    DIGITAL இந்தியா திட்டத்தில் கீழ் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பு முதல் கட்டயப்படமாக கொண்டுவரவேண்டும்.
    (இந்தியாவின் வாழும் கோடிக்கணக்காண ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுவர்).


    21000 பி.எட கணினி ஆசிரியர்கள் உள்ளனர் .
    அனைவரும் (TNTEU)பட்டம் பெற்றோம் .(21000 பெற்ற பட்டம் பயன் இல்லாமல் வறுமையில் வாடுகின்றோம் )
    1)TET ,TRB போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லை.
    2) AEEO, DEO தேர்வுக்கு அடிப்படை கல்வி B.ED. கணினி அறிவியல் B.ED பெற்ற அதிலும் எங்களுக்கு வாய்ப்பு இல்லை.
    3)பகுதிநேர ஆசிரியர்கள் பணியிலும் எங்களுக்கு வாய்ப்புகள் இல்லை.

    திரு வெ.குமரேசன் -9626545446(மாநில செயலாளர் ) 
    தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
    �லட்சியம் வெல்லும் நிச்சயம்�

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive