ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை
(செப்டம்பர்14) மீண்டும் கூடுகிறது.தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் கடந்த
மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த 4-ஆம் தேதி சட்டப் பேரவை
ஒத்திவைக்கப்பட்டது.
உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக ஒரு வார காலம் விடுமுறை விடப்பட்டு, இப்போது மீண்டும் பேரவை திங்கள்கிழமை கூடுகிறது. காவல், தீயணைப்புத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான மானியம் வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த விவாதங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடஉள்ளார்.
சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் வருகிற 29-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்பட்டது. அவை உரிமை மீறல் குழுவின் அறிக்கை பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.கருணாநிதியிடம் இருந்து உரிய விளக்கத்தைப் பெற ஏழு நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், கருணாநிதி இதுவரை தனது விளக்கத்தைத் தெரிவிக்கவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...