சென்னையில், சிக்கன் பிரியாணி எனக்கூறி, 'பூனைக்கறி' பிரியாணி விற்பனை
செய்யப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாகவே, சில சிறிய
சாலையோர கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளில், சுகாதார குறைவான உணவு, குறிப்பாக
அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் உள்ளன.
குறைந்த விலைக்கு கிடைப்பதால், தரமற்ற மாமிசத்தை கடைக்காரர்கள் வாங்கி, லாபம் பார்க்கின்றனர். அந்த உணவை சாப்பிட்டால், வயிற்று கோளாறு உள்ளிட்ட, பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. ஒரு கட்டத்தில், 'காக்கா பிரியாணி' விற்கப்படுவதாக கூட, தகவல் வெளியானது.
நரிக்குறவர்கள்:
தற்போது, சிக்கன் பிரியாணியில், பூனைக்கறி கலக்கப்பட்டு விற்பனை செய்யும்
போக்கு, அதிகரித்து வருவது தெரியவந்து உள்ளது. அந்த கடைகளுக்கு தேவையான
பூனைகளை, நரிக்குறவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்; இதை, அவர்களே
ஒப்புக்கொண்டு உள்ளனர். நரிக்குறவர் குடும்பங்களில், திருமணம் உள்ளிட்ட
விசேஷ நிகழ்ச்சிகளின் போது, பூனைக்கறியை சமைத்து சாப்பிடுவர். அவர்கள்
தற்போது, தங்கள், 'சிறப்பு' உணவின் ருசியை, மற்றவர்களும் அறிந்து கொள்ளும்
வகையில், உணவகங்களுக்கு விற்பனை செய்ய துவங்கி உள்ளனர்.
இதுகுறித்து, 'பீப்பிள் பார் கேட்ல்ஸ் இன் இந்தியா - பி.எப்.சி.ஐ.,'
அமைப்பின் நிர்வாகி அருண் பிரசன்னா கூறியதாவது:சென்னையில், சில இடங்களில்
பூனைகளை நரிக்குறவர்கள் பிடித்து, கொன்று வருவது தொடர்பான புகார்கள்,
அதிகளவில் வரத் துவங்கி உள்ளன. அவர்கள், ஒருவித ஓசையை எழுப்பி, பூனைகளை
தங்கள் பக்கம் எளிதாக ஈர்த்து கொல்கின்றனர். சில சமயங்களில், கும்பல்
கும்பலாக பிடித்து, மயக்க மருந்து கொடுத்து, கூண்டுகளில் அடைத்து வைத்து,
பின், ஓட்டல்களுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த விஷயம், நரிக்குறவர்களிடம்
இருந்து, பூனைகளை மீட்ட போது தெரியவந்தது.
பறிமுதல்:
சில நேரத்தில், பொதுமக்களே நரிக்குறவர்களை அழைத்து வந்து, பணம் கொடுத்து
பூனைகளை பிடித்துச் செல்லும்படி கேட்டுக் கொள்கின்றனர். குடியிருப்போரிடம்,
பணம் வாங்கிக் கொண்டு, பூனைகளை பிடிக்கின்றனர்; பின், ஒரு பூனை, 30 ரூபாய்
என்ற விலைக்கு விற்று விடுகின்றனர். நரிக்குறவர் இனத் தலைவர்களிடம்
அறிவுரை கூறினால், 'பூனையை பிடிப்பதை நிறுத்தி விட்டோம்' என்கின்றனர்;
ஆனால், மீண்டும் அதை தொடர்கின்றனர். நாங்கள், கடந்த சில மாதங்களில்,
கையும், களவுமாக அவர்களை பிடித்து, 45 பூனைகளை பறிமுதல்
செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...