விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தில் ஊர்தி ஓட்டுநர்
மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தொகுதிப்பூதிய அடிப்படையில்
நிரப்பப்பட இருப்பதால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலகத்தில் ஊர்தி ஓட்டுநர் மற்றும் ஊர்தி
உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் தொகுப்பூதியம்
வழங்கப்படும். இதற்கு முன்னுரிமை பெற்ற ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 35
வயதுக்கு உள்பட்ட 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நான்கு சக்கர வாகனம்
ஓட்டுவதற்கு உரிம்ம் பெற்ற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதேபோல், ஊர்தி உதவியாளர் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம்
அளிக்கப்படும். இப்பணியிடத்திற்கு முன்னுரிமை பெற்ற ஆதிதிராவிட சமூகத்தைச்
சேர்ந்த 18 வயது முதல் 30 வயதிற்குள்பட்டவர்கள் எழுத படிக்க தெரிந்தவர்கள்
மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
எனவே மேற்கண்ட பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, வயது சான்றிதழ், சாதி
சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், சான்றிதழ், குடும்ப அட்டை நகல்களை இணைத்து
விண்ணப்பம் எழுதி பூர்த்தி செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு
நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக்
கொண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...