மதுரை: தனியார் கல்லுாரிகளுக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள சம்பளம்
சாரா செலவினங்களை வழங்க கோரி நீதிமன்றத்தை அணுகுவது என மதுரை காமராஜ்
பல்கலை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மதுரையில் சங்க
ஆண்டு பொதுக் கூட்டம், தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது.
கல்லுாரிகள் வளர்ச்சிக்காக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
முடிவில், கல்லுாரிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு
நீதிமன்றத்தை அணுக வேண்டும். பல ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாத மாணவர்கள்
சிறப்புக் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். தனியார்
கல்லுாரிகளுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள சம்பளம் சாரா
செலவினங்களை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நீதிமன்றத்தை
அணுக வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகச்
செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். பொதுச் செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல் நன்றி
கூறினார்.
நிர்வாகிகள் தேர்வு: சங்கத்திற்கு 2015- 2018 ஆண்டுக்கான நிர்வாகிகள்
தேர்வு செய்யப்பட்டனர்.தலைவராக டாக்டர் ஆர்.லட்சுமிபதி (தலைவர்,
சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, மதுரை), பொதுச் செயலாளராக
பெரீஸ் மகேந்திரவேல்(வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரித் துணைத் தலைவர்,
மதுரை), பொருளாளராக மாரீஸ்குமார் (தலைவர், சேர்மத்தாய் வாசன் மகளிர்
கல்லுாரி), துணைத் தலைவர்களாக ராஜகோபால் (மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரி
துணைத் தலைவர்), தவமணி கிறிஸ்டோபர் (அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் மற்றும்
செயலாளர்), தாமோதரன்(தேனி, கம்மவார் கல்லுாரி), துணை செயலாளர்களாக
செல்வராஜன்(சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி செயலாளர்), பிரபாகரன்( திண்டுக்கல்
ஸ்ரீ.வி. கல்லுாரி செயலாளர்), ஜெயராமன்( மதுரை ஆயிர வைசிய கல்லுாரி
செயலாளர்) தேர்வு செய்யப்பட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...