Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் மீது தாக்குதல்: எஸ்.ஐ.யை கண்டித்து சாலை மறியல்

       திருச்செங்கோட்டில் ஆசிரியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, ஆசிரியர்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

       நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாமக்கல்லைச் சேர்ந்த மோகன்குமார் (30) பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

தற்போது தேர்வுகள் நடைபெறுவதால், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வினாத்தாள்களை பெற்றுக் கொண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல, பெண்கள் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வேகமாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்துக்

காவல் உதவி ஆய்வாளர் லட்சுமணகுமார், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் செல்ல மேம்பாலத்தை பயன்படுத்துங்கள் என கூறினாராம்.

அவசரமாக செல்ல வேண்டும் என மோகன்குமார் கூறியதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் லட்சுமணகுமார்,

மோகன்குமாரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த ஆசிரியர்

மோகன்குமார் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியரைத் தாக்கிய போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து, திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் ஆசிரியர்கள், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.




2 Comments:

  1. 5 சதவீதம் ரத்து வழக்கில் மதுரையில் வெற்றியடைந்த திரு வின்சென்ட் நண்பரே உங்களது நம்பர் எப்படியோ அழிந்து விட்டது.... தற்போது உச்சநீதிமன்ற டி.இ.டி ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் நிலை குறித்து அவசரமாக கலந்து ஆலோசிக்க வேண்டும் .... ஆகவே உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும்

    பி.இராஜலிங்கம் புளியங்குடி
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம்
    செல் 95430 79848

    Share to all frnds immediately...

    ReplyDelete
  2. நமது கணினி ஆசிரியர் FACE BOOK முகநூல் 2011ஆண்டு தொடங்கி இன்று வரை ..
    ====================================================

    📌முகநூல்(FACEBOOK)முகவரி:

    bedcomputerscience@gmail.com



    📌வெற்றிகரமாக 5000 நபர்களை தொட்டுள்ளது.
    அனைவரையும் வணங்குகிறேன்.

    📌FACEBOOK விதியின் படி 5000 நண்பர்கள் க்கும் மேல் இணைத்துக் கொள்ள இயலாது.

    📌167பேரின் Friend request வந்ததுள்ளது இவர்கள் அனைவரும்

    📌தங்களின் முழு ஆதரவுடன் முக நூல்( Face book Group) குழுவில்
    5580
    நண்பர்களுடன்தங்களை இணைத்துக் கொள்ளுங்கள்

    https://mbasic.facebook.com/groups/184341191746976?_e_pi_=7%2CPAGE_ID10%2C6057053955

    தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் நன்றி..
    ====================================================

    சிதறிக் கிடந்தால் உதிரிகள் நாம்!சேர்ந்து நடந்தால்சேனைகள் நாம்!

    ஆசிரியர்கள்,கணிப்பொறி அறிவியல் ஆசிரியர் உறவினர்கள் நாம் அனைவரும்

    ஒன்றுபடுவோம்!
    உயர்வடைவோம்!


    திரு வெ.குமரேசன் -9626545446(மாநில செயலாளர் )


    �லட்சியம் வெல்லும் நிச்சயம்�


    FB ID:bedcomputerscienc­­e@gmail.com

    EMAIL ID:tnbedcsvips@gmail.com

    whats app:9626545446

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive